Ctrl F கட்டுரையாளர்களே!



Ctrl F கட்டுரையாளர்களே!
Control F கட்டுரையாளர்களே!
தேய்ந்து, முகமழிந்த
உங்கள் கீபோர்டின் ‘F’ கீயின்
புலம்பல் ஒலி கேட்கிறதா உங்களுக்கு?
எத்தனையோ பிடிஎஃப்களில்
எத்தனையோ கூகுள் புத்தகங்களில்
உங்களுக்காக மேற்கோள்களைத் தேடியலைந்த
எஃபின் துயரத்தை உணர்கிறீர்களா?
ட்ரெண்டிங் சொற்களையும் தாண்டி
உங்களுக்காக வார்த்தை வேட்டை நடத்திய
அதன் கால்கள் சோர்ந்து போய்விட்டன, தெரியுமா உங்களுக்கு?
சொற்களைத் தேடிப் பிடித்து Highlight சிறைக்குள் அடைத்த
அதன் வேகம் குறைந்துவிட்டதை அறிவீர்களா நீங்கள்?
Ctrl F கட்டுரையாளர்களே!
உங்கள் எஃப் கீயின் இறுதி மூச்சு
உங்கள் விரல்களைச் சூடாக்கவில்லையா?
P இல்லையென்றால் B-யைக் கொண்டு ‘ப’னாக்களை உருவாக்கலாம்
K இல்லையென்றால் G-யைக் கொண்டு ‘க’னாக்களை உருவாக்கலாம்
C இல்லையென்றால் S-யைக் கொண்டு ‘ச’னாக்களை உருவாக்கலாம்
ஆனால் F செயலிழந்தால் en செய்வீர்,
கண்ட்ரோல் எஃப் கட்டுரையாளர்களே?