Wednesday, October 27, 2010

நீர்க்குட்டையாகி...........

நீர்க்குட்டையாகி
உன் நிலவொளியில் மயங்கிக் கிடக்கிறேன்

பறித்து வைத்திருந்த
என் நட்சத்திரங்களுள் ஒன்றை
உள்ளங்கையில் ஏந்தி
களிப்புடன் இருக்கிறாய்

நம் சந்திப்புக்காகக்
காத்திருந்த ஜீவ நதி
இருளையும் வெளிச்சத்தையும் கடந்து
ஓடிக்கொண்டிருக்கிறது

8 comments:

மாதவராஜ் said...

நல்லாயிருக்கு..!

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

நல்லாயிருக்குங்க...

D.R.Ashok said...

//காத்திருந்த ஜீவ நதி
இருளையும் வெளிச்சத்தையும் கடந்து
ஓடிக்கொண்டிருக்கிறது //

:)

மண்குதிரை said...

மாதவராஜ், நித்திலம், அசோக்

மூவருக்கும் என் நன்றி.

Vel Kannan said...

இறந்த காலத்தில் (நீர்க்குட்டையாகி) ஆரம்பித்து
நிகழ் காலத்தில் ( மயங்கிக் கிடக்கிறேன்) நின்று
எதிர் வரும் காலத்தையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது மண்குதிரை
ரொம்ப நல்லாயிருக்கு

உயிரோடை said...

//நீர்க்குட்டையாகி உன் நிலவொளியில் மயங்கிக் கிடக்கிறேன்//

பல்வேறு திசைக்காக பயணங்களை உள்ளடக்கிய படிமம். நல்ல கவிதை. வாழ்த்துகள் மண்குதிரை

அன்புடன் அருணா said...

அட!

மண்குதிரை said...

வேல்கண்ணன், அருணா, லாவண்யா

நன்றி.