Saturday, October 9, 2010

காட்சிகள் மிகத் துல்லியமாகிவிட்டன












காட்சிகள்
எத்தனை துல்லியமாகிவிட்டன
பல்லாயிரம் வண்ணங்களுடையதாய்
மிகத் தெளிவாகிவிட்டன
நிகழ்விலிருந்து விலகிச் சென்றுவிட்ட மலர்களும்
அதன் இயல்பான அழகோடு மணம் வீசுகின்றன
சூரியன் எழுந்து வரும் காலையையும் தாண்டித்
துழவி முயங்குகிறது பிரக்ஞை

சரி.., இந்தச் சட்டகங்களுக்குள்
வெண்பனி சூழ்ந்த முதல் சித்திரம் எது?

11 comments:

Geetha said...

//வெண்பனி சூழ்ந்த முதல் சித்திரம் எது? //

:)

sakthi said...

அருமை

D.R.Ashok said...

நல்லாயிருக்கு MK

Haiku charles said...

Arumai

Haiku charles said...

Arumai

ஆதவா said...

இதைப் படித்ததும் ஏனோ மனுஷ்யபுத்திரனின்

மரக்கால்களுக்குத்
தாம் வேர்களோடும்
பச்சையத்தோடும் இருந்த
நினைவுகளின்
வருத்தமிருக்குமா?

எனும் கவிதை நினைவுக்கு வந்தது.

நாம் நம்மை ஒவ்வொரு லேயராக மூடிக் கொண்டு மூடிகொண்டு பெருத்து விடுகிறோம், அதனால் ”ஆதி”யை கண்டுபிடிக்க இயலாமல் தவிக்கிறோம்.

உரிக்க உரிக்க ஒன்றுமில்லாதது வெங்காயம்.
மனிதனும் அப்படித்தான்.

ஒவ்வொருவனுக்குள் இருப்பது நிசப்தமான புலப்படாத அருவம். அதன் உருவம் கண்டுபிடிப்பவனே சிறந்தவனாகிவிடுகிறான்.

உலகின் பல ஓவியங்கள் நிர்வாணமாகத்தான் வரையப்பட்டது. அங்க உணர்ச்சிகளுக்காக மட்டுமல்ல, கூச்சமற்ற நிர்வாணம் புலப்படாத உருவத்தை வெளியே எடுத்துக் கொடுக்கும் என்பதாலும் கூட.

கவிதைக்கு வாழ்த்துகள் மண்குதிரை!!

Vel Kannan said...

நீங்கள் வைத்த கேள்வியில் இருந்து இன்னுமொரு சித்திரமும் கவிதையும் விரிகிறது மண்குதிரை

மண்குதிரை said...

நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.

உயிரோடை said...

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க மண்குதிரை.

மண்குதிரை said...

நன்றி லாவண்யா

பத்மா said...

நம் இருப்பை ஒரு சித்திரமாக வெளியிலிருந்து யாரேனும் பார்க்க நேர்ந்தால் ...அது வெண்பனி சூழ இருக்குமா?
பனி நம் பார்வையிலா? இல்லை சித்திரத்தை சூழ்ந்தா?
எதனுள்ளும் சித்திரம் தெளிவாய் தானே இருக்கும்?