
இந்த எளிய வாழ்வைக் கடக்க
எத்தனை சிக்கலான
பணியை மேற்கொண்டிருந்தேன்
இப்போது எல்லாவற்றையும் உதறிவிட்டேன்
உறவுகளின் மெல்லிழைகளை உடைக்கும்
ஆழ் கனவை விலக்கி எறிவது போல்
இப்போது இவ்வுலகின் எந்த மூலைக்கும் பயணமாகலாம்
ஒரு மெல்லிய சருகைப் போல் மலையின் மீதேறி
நதியில் வீழ்ந்து
சமுத்திரத்தின் அலைகளைத் துரத்தி விளையாடலாம்
வெகுநாளைய சிக்கலுக்குப் பிறகு
இப்போது எனக்குப் பிடித்த பணியான
பூந்தோட்டத்தின் பராமரிப்பாளனாகிவிட்டேன்
பராமரிப்பாளனுக்குண்டான
உங்கள் தேய்வழக்கை விலக்கிவிடுங்கள்
இத் தோட்டத்திலுள்ள எல்லாச் செடிகளோடும்
நெருக்கமான பரிச்சயம் உண்டு
அவற்றின் மொட்டுகளை தாய்மைகொண்டு பேணுகிறேன்
பூக்கள் அத்தனையோடும் என் குழந்தமைமொழியில்
சிரித்து மகிழ்கிறேன்
தளிர்விடும் ரோஜா தளிரின் பச்சையம் கண்டு
புளகாங்கிதமடைகிறேன்
சமீபத்தில் தூவிய கேந்திப்பூ விதைகளைப் பாருங்களேன்
பூமியைத் துளைத்து முன்னேறி
என்னோடு ஸம்பாசிக்க முயல்கிறது
நெகிழ்வில் திளைத்துக்கொண்டிருக்கிறேன்
என் பூந்தோட்ட மேகங்களோ
எங்கோ நீர்நிலையிலிருந்து
மழையை எடுத்துவந்து
இக்கணத்தை மேலும் உன்னதமாக்குதிறது
20 comments:
திரும்பவும் எழுத வந்ததற்கு சந்தோஷம்.
இந்தக் கவிதையிலும் அந்த சந்தோஷம் இருக்கிறதே...!
நல்லாயிருக்குங்க.
//என் பூந்தோட்ட மேகங்களோ
எங்கோ நீர்நிலையிலிருந்து
மழையை எடுத்துவந்து தெளித்து
இக்கணத்தை மேலும் உன்னதமாக்குதிறது //
:) நல்லாயிருக்கு.
//இந்த எளிய வாழ்வைக் கடக்க
எத்தனை சிக்கலான
பணியை மேற்கொண்டிருந்தேன்//
அருமையான வரிகள் நண்பா..
புரிகிறது நண்பா , மேலும் மேலும் பூத்துக் குலுங்கட்டும் உங்களின் தோட்டம்.
///இந்த எளிய வாழ்வைக் கடக்க
எத்தனை சிக்கலான
பணியை மேற்கொண்டிருந்தேன்..//
எனக்கும் பிடித்திருக்கிறது நண்பா நானும் யோசிக்கிறேன்.
மண்குதிரை, எளிமையாக சலசலக்கு ஓடை போலிருக்கு கவிதை. ஆனா உங்கள் மொழியில் கொஞ்சம் மாற்றம் வந்திருப்பது போல நினைக்க வைக்கிது
ம்ம்ம் மகிழ்ச்சி நண்ப!
பூவாய் மாறியது பூந்தோட்டகாவல்காரரின் மனது
Arumai..arumai
//அவற்றின் மொட்டுகளை தாய்மைகொண்டு பேணுகிறேன்// கவிதை அருமை. வாழ்த்துக்கள்
அனைவருக்கும் என் நன்றியும் அன்பும்
//இப்போது இவ்வுலகின் எந்த மூலைக்கும் பயணமாகலாம்
ஒரு மெல்லிய சருகைப் போல் மலையின் மீதேறி
நதியில் வீழ்ந்து
சமுத்திரத்தின் அலைகளைத் துரத்தி விளையாடலாம்//
மிகப் பிடித்த விளையாட்டை விளையாடும் குழந்தைகள் கூட்டத்தைப் பார்த்து என்னையும் சேர்த்துக்கோங்கப்பா ன்னு சொல்லுவது போல சொல்லத் தோன்றுகிறது.
நன்றி சுகிர்தா
உங்கள் கவிதைகளில் வழக்கமாகத் தெரியும் அதே அழகியல், எளிமை, இனிமை ஆனால் it's becoming very repetitive
nandha
thanku for ur valuable comment
அழகான உணர்வு நண்பா! இப்படி இருக்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
-ப்ரியமுடன்
சேரல்
நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life
arumai nanba
சேரல், மணி இருவருக்குமென் நன்றி
மிக இதமாக இருக்கிறது.
Post a Comment