Thursday, September 2, 2010

சாபம் நீங்கிய அஃறிணை













நூற்றாண்டுச் சாபம் நீங்கிய
அஃறிணையின் புலன்கள் மீண்டு
பதட்டம்கொள்கின்றன
அவை
கேக்கக்கூடாத இசையைக்
கேட்டு ரசிக்கின்றன
பார்க்கக்கூடாத காட்சியைப்
பார்த்துப் பரவசமடைகின்றன
நுகரக்கூடாத வாசனையின் தடம் பற்றி
முன்னேறிச் செல்கின்றன
புசிக்கக்கூடாத உணவைப் புசித்து
எழும் தேக்கநிலையின் பரிதவிப்பில்
பருகக்கூடாத செந்நதியில் வீழ்ந்து
உன் சமுத்திரவெளியின்
முகடுகளைத் துழவியலைகின்றன.

10 comments:

sakthi said...

உன் சமுத்திரவெளியின்
முகடுகளைத் துழவியலைகின்றது

நல்லாயிருக்குங்க மண்குதிரை

Vel Kannan said...

ஏதோ ஒன்று புரிந்தும் ஒன்று உடைந்தும் போகின்றது மண்குதிரை.
சரியான சொற்களில் எனக்கு சொல்ல தெரியவில்லை

Geetha said...

அடர் வரிகள்...

சற்று நின்று செல்ல வைக்கிறது

sugirtha said...

ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க மண்குதிரை. இந்த கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

மண்குதிரை said...

சக்தி, வேல்கண்ணன், கீதா, சுகிர்தா அனைவருக்கும் என் நன்றி

D.R.Ashok said...

எனக்கு புரிஞ்சிடுச்சு... மண்குதிரை... ஆனால் இது ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆகுது... :)

ரொம்ப நல்லா வந்திருக்கு... :)

மதுரை சரவணன் said...

//பருகக்கூடாத செந்நதியில் வீழ்ந்து
உன் சமுத்திரவெளியின்
முகடுகளைத் துழவியலைகின்றன.//


கவிதை அருமை. வாழ்த்துக்கள்

மண்குதிரை said...

அசோக், சரவணன்

மிக்க நன்றி

உயிரோடை said...

கவிதை இன்னும் முற்று பெறவில்லை. முடிவு தெரியாத சினிமா போலான வாழ்க்கையின் தினங்களை எப்படி முடிப்பது என்று கேட்டால் என்னிடமும் விடையில்லை. நல்லா வந்திருக்கு மண்குதிரை ஆனா மீண்டும் எழுதுங்க இது இன்னும் அழகாகும் என்று நினைக்கிறேன்.

மண்குதிரை said...

லாவண்யா,

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி