Tuesday, August 31, 2010

காலச்சுவடு









எந்தப் புள்ளியைப் பற்றியும்
சுழலவில்லை
சுழற்றுவதற்கான
கூர்மைகொண்ட முனையில்லை
காத்திரம் மிகுந்த சரித்திரமில்லை
கசப்புநதி பாயும் நிலங்களில்லை
மிதமான ஒளி பெய்யும்
இதமான இரவுகளிலும்
கோப்பைகளின்றி
பரிமாறிக்கொள்ள எதுவுமில்லை
காற்றிலேறி எவரையும் சாட
எத்தனிப்பில்லை
ஆகாயம் பூமி
அந்த அடிவானப் பளபளப்பு
கடல் விண்மேகம்
ஒரு காலையின் பரிசுத்தம்
சிறுதூறல் நீர்நிலை
பெரிய மலையின் ஸ்திரமான மெளனம்
ஒரு கூழாங்கல்லின் நேர்த்தி
மிகச் சிறிய அஃறிணைகளின் வாழ்வியல் நம்பிக்கைகள்
எதுவுமே இல்லை
கடந்துகொண்டிருக்கும் வாழ்க்கைச் சொல்லச் சொல்லி கேட்குமென்றுதான்
என் நண்பர்களே.

10 comments:

Vel Kannan said...

அடேயப்பா ... சட் சட்னென்று வேறு வேறு தளத்திற்கு மாற்றிகொண்டே செல்கிறது உங்களின் கவிதை
(உ.ம்)
//பெரிய மலையின் ஸ்திரமான மெளனம்//
மலை உச்சியில் நிதானிக்க வைக்கிறது. அடுத்த கணம்
//ஒரு கூழாங்கல்லின் நேர்த்தி// மலையின் ஏதேனும் ஒரு பகுதியில் அமரவைக்கிறது
//கடந்துகொண்டிருக்கும் வாழ்க்கைச் சொல்லச் சொல்லி கேட்குமென்றுதான்
என் நண்பர்களே.//
என்ன தவம் செய்தோம் நண்பா. ...

Vel Kannan said...
This comment has been removed by the author.
Vel Kannan said...

வாழ்த்துகளுடன் அன்பும் நண்பா. ...

அனுஜன்யா said...

நல்லா இருக்கு.

அனுஜன்யா

அகநாழிகை said...

ம்ம்.. அருமை.

Geetha said...

ரொம்ப நல்லாயிருக்கு.

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்கு நண்பா

D.R.Ashok said...

நல்லாயிருக்கு MK

உயிரோடை said...

க‌விதை நல்லா இருக்கு. கால‌சுவ‌டில் வ‌ந்திந்திக்கா? வாழ்த்துக‌ள்

மண்குதிரை said...

வேல்கண்ணன், அனுஜன்யா, வாசுதேவன், கீதா, யாத்ரா, அசோக், லாவண்யா அனைவருக்கும் என் நன்றி.