
பழக்கமான நகரச் சாலையில்
ஒரு நீர்க் குமிழ் சுற்றிக்கொண்டிருக்கிறது
வெக்கை நிறைந்த
கசகசப்பான இப்பெருநகரச் சாலையில்
மெல்லிய அதன் வடிவு என்னை அச்சப்பட வைக்கிறது
எதோ சிறிய மனிதனின்/மனுசியின்
விசை கொண்ட அதன் எழிலான நடனம் என்னைப் பரவசப்படுத்துகிறது
எளிய வாழ்வை மேற்கொண்டிருக்கும்
மிக எளிய மக்களின் வாழ் வெளிக்குள்
பயணமாகும் அக் குமிழ்
கனவினைத் துளைத்து
எனிரவுகளில் உடைந்து கொண்டேயிருக்கிறது
7 comments:
as usual the aestheticism in your poetry is nice
வாவ் ரொம்ப நல்ல கவிதைங்க மண்குதிரை. நீர்க்குமிழி ஒரு படிமம். நிலையற்ற வாழ்வை எளிமையாக சொல்லி போகும் சித்திரம். உங்கள் கவிதையை அதையொட்டி ஒரு பதட்டம் ஒரு ரசனை ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. ம்ம் நிறைய எழுதுங்க மண்குதிரை ஏன் அப்பப்ப காணாம போறீங்க
பின்னிரவில் மீண்டும் ஒரு குமிழி
உருவாகிறது..
எளியவர்களின் ’நாளையாவது விடியும்’ என்ற நம்பிக்கையையோட்டி
விடியலுக்கான தன்
பயனத்தை இனிதே தொடங்குகிறது
இப்பொழுது அது பலூனாய் மாறியிருக்கிறது...
நாளை பருந்தாய் மாறலாம் ;)
(நீங்க எழுதியிருக்கறது சூப்பர் நண்பா... நான் எழுதியிருக்கறது நம்ம ‘தமிழ்படம்’ மாதிரி :), side effecttu)
ரொம்ப நாட்கள் கழித்து என்னுடைய ரீடரில் புதிய மண்குதிரை கவிதை. மகிழ்ச்சி.
அழகு கவிதை, ரசிக்கவைத்தது.
படித்த(உணர்ந்த) பிறகு என்னுள் சுற்றிகொண்டே இருக்கிறது நண்பரே
வெடித்து விடும் அபாயம் ஏதுமில்லாமல் ...
நந்தா, லாவண்யா, அசோக், சுந்தர், கீதா, வேல்கண்ணன்
தங்கள் அனைவரின் அன்புக்கும் என் நன்றி
Post a Comment