
( நான் வசிக்கும் கியுபீப் (curepipe) நகரம் )
நடை வழியிலிருந்த
சிறிய பூவைக் கொய்கிறேன்
அது இந்தப் பற்றுதலுக்காகத்தான்
காத்திருந்தேன் என்கிறது
வரிசையாக மரங்கள் நின்றிருந்த
சாலையில் நடந்து கொண்டே
ஒழுகும் வெயிலைப் பருகுகிறேன்
அதுவும் அப்படியே உணர்ச்சிவசப்படுகிறது
கடந்த சென்ற சிறிய தென்றல்
தலைகோதிச் செல்கிறது
பறந்து கொண்டிருக்கும் வெள்ளை யானை
நீர் தெளித்து ஆசிர்வதிக்கின்றது
இனிமையான புதிய பறவையொன்று
உன் வருகைக்காகத்தான் காத்திருந்தேனென்று
பாடத் தொடங்குகிறது
முன் அறிமுகமில்லாத
இரு வெள்ளைப் புறாக்கள்
உன் கொடைக்காகத்தான்
பசியோடு இருப்பதாக
வருத்தம் தெரிவிக்கின்றன
அடர்ந்த மரமொன்று
நிழல் கொண்டு அணைக்கின்றது
இப் புல்வெளி, சிறு செடி,
அப் புதர், நீர்நிலை
இந்த நிலப்பரப்பே
எனக்கானதாக மயக்கம் தருகிறது
குதூகலம் கொண்டோடுகிறேன்
நெரிசலான சந்தையின்
குறுகிய வீதியிலிருக்கும்
எல்லா ஆடைகளும்
எனக்காகக் காத்திருக்கின்றன
அங்காடிகளின் கண்ணாடிப் பெட்டிக்குள்ளிருக்கும்
ஆபரணங்கள் எல்லாம்
எனக்காக மினுமினுக்கின்றன
வண்ண வண்ணக் காகிதங்களில்
வீற்றிருக்கும் பண்டங்கள் எல்லாம்
என் சுவைக்காகத்தான் ஆவல் கொண்டிருக்கின்றன
என்னாயிற்று
எனதிந்த நாளுக்கு?
தாளாத சந்தோசத்தை
தாங்காமல்
என் சிறு மனது
எப்படி துடிக்கின்றது தெரியுமா?
புதிய ஆடையொன்றை அணிந்து
ரசம் பூசிய என் அறைக் கண்ணாடியை சந்திக்கிறேன்
இத்தனை அழகுடைய ஒருவனை இனி சந்திக்கப்போவதில்லை என்கிறது
நாணம் மிகுதியாக புன்னகை தெறிக்கிறது.
26 comments:
:)
கவிதை அருமை.
//தேவதைகளின் தெருக்கள் எனக்காகவே காத்திருக்கிறது//
இப்படியொரு
லைனை வச்சிருக்கலாமே!
நல்லாருக்கு பாஸு!. வாழ்த்துகள்.
நண்பா , சந்தோசம் கொப்பளிக்கிறது வரிகளில் ... இதற்காகத்தான் காத்திருந்தேன் என்பதுபோல வரிகளுக்கிடையில் புகுந்து கூப்பாடு போடுகிறது மனது ;-)
வாழ்த்துக்கள்
நல்லாருக்கு மண்குதிரை!
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது!
:-)))))
துள்ளாட்டம் போடுகின்றன வரிகள்.
ரசித்தேன்.
//ஒழுகும் வெயிலைப் பருகுகிறேன்//
நல்லா இருக்கு.
நல்ல இருக்கு நண்பா
மிக ரசித்தேன் தோழரே..
குதூகலாமான கவிதை.! அழகு.!
வாசுதேவன், ஏக்நாத், வேல்கண்ணன்,மாதவராஜ், ஜெனோ, லாவண்யா, பாரா, உழவன் மற்றும் ஆதிமூலகிருஷ்ணன்
தங்களின் இந்த வரிகள் எனக்கு மிகுந்த உற்சாகமளிக்கின்றன நன்றி.
நண்பா அசோக்
தங்கள் புன்னகைக்கும் என் நன்றி. :)
பிறந்த நாள் வாழ்த்துகள் சகா..
இந்தக் கவிதையைக் கடந்துபோகும் மனம் இறக்கைக் கட்டி பறக்கிறது.
எனக்கும்
ரொம்ப சந்தோசமா இருக்கிறது.
பிறந்த நாளா? சொல்லவ்வேய்யில்ல!!
கிடார்கார்க்கு மட்டும் தெரிஞ்சுருக்கு?
பார்க்கும் விசயங்களில் மனம் பிரதிபலிப்பது அருமை. சிறிய பூவை,ஒழுகும் வெயிலை, மரத்தின் நிழல் இவை அனைத்தையும் நானும் கடந்து வந்ததைப் போல் எப்போதோ உணர்ந்த தருணங்களை உங்கள் கவிதை படிக்கையில் மறுபடி உணர்ந்தேன்...
நல்லா இருந்துச்சுங்க!
the flow makes me to smile :)
படிச்சதும் அதே சந்தோஷம் ஒட்டிக் கொண்டது என்னையும்! பூங்கொத்து!
அழகும் ரசனையும் ததும்பும் வரிகள்.. படிக்கும்போதே சந்தோஷமா இருக்கு :))
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
இப்படி சந்தோஷமா கவிதை படிக்கும் போது தானாகவே புன்சிரிப்பு வருதுங்க நன்றி .
முத்துவேல், சுகிர்தா, நளன், அருணா, பத்மா, கெள்ரிப்ரியா,
அனைவருக்கும் என் நன்றி
போகி தகவலுக்கு நன்றி
கார்க்கி, தங்கள் வாழ்த்துக்களுக்கும் என் நன்றி
வாழ்த்துகள் தோழரே!
-ப்ரியமுடன்
சேரல்
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
romba sappaiya irukku.
old matter repeated umpteen times,
lacks personal feelings,
if you think something and wite some sentence it will not be a kavidhai.
Maathi yosi.
எனக்குப் பிடிச்சிருக்கு. சந்தோசத்தைப் பேசும் கவிதைகளே வெகு சில. நீங்கள் இன்னும் நிறைய எழுதணும் பாஸ்.
அனுஜன்யா
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://www.thalaivan.com
Hello
you can register in our website http://www.thalaivan.com and post your articles
install our voting button and get more visitors
Visit our website for more information http://www.thalaivan.com
Post a Comment