நண்பர்களுடைய காதல்
உண்மையாக இருந்திருக்கிறது
நண்பர்களின் காதலிகள்
அழகாக இருந்திருக்கிறார்கள்
அதிர்ந்து பேசாத அவர்களை
வசம் கொண்டதை நினைந்து
நண்பர்கள் பெருமை கொள்ளும்
மொட்டைமாடி சம்பாசனைப் பொழுதில்
மேகத்தில் மறைந்தகிடந்த நிலவொளி விலகி
முழுமையடைகிறது
உதிர்ந்த காதலைச் சொல்லும்
திரைப்படங்களை சிலாகிக்கிறார்கள்
அவர்களின் அக் காதல் கதையின் திருப்பங்கள்
எதிர்பார்க்கக்கூடியதாகவும்
அதன் இறுதி
ஒரே மாதிரியாகவும் சோர்வடையச் செய்கிறது
பொய் கலந்த உண்மையாக இருக்கிறது
உண்மை கலந்த பொய்யாக இருக்கிறது
பொய்யும் உண்மையும் சரியானவிகிதத்திலும் இருக்கிறது
விலகிய வேளையில்
அப் பொய் உண்மையாகவும்
உண்மை பொய்யாகவும்
மயக்கம் தருகிறது
Monday, February 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
//விலகிய வேளையில்
அப் பொய் உண்மையாகவும்
உண்மை பொய்காவும்
மயக்கம் தருகிறது //
நல்லா இருக்குங்க
பொய்காவும் -பொய்யாகவும்
கவிதையும் பொய்யும் அழகுங்க....
பிடித்த பெண்னுடன் வழுக்கும் பணியில் சேர்ந்த இசையில் நடனமாடுவது போல் உணர்ந்தேன். நன்றி கவிஞனே!
ரொம்ப நல்லாருக்கு ..
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
அருமை.
இறுதி வரிகளில் இன்னும் எதோ நீங்கள் சொல்ல வந்து சொல்ல முடியாமல் போனதாய் தெரிகிறதே நண்பா...
//உதிர்ந்த காதலைச் சொல்லும்
திரைப்படங்களை சிலாகிக்கிறார்கள்
அவர்களின் அக் காதல் கதையின் திருப்பங்கள்
எதிர்பார்க்கக்கூடியதாகவும்
அதன் இறுதி
ஒரே மாதிரியாகவும் சோர்வடையச் செய்கிறது//
யதார்த்தம் கலந்த வரிகள்...
நல்லாருக்கு மண்குதிரை.இறுதி வரியில் நானும் மாதுவுடன் உடன்படுகிறேன்.
நல்லா இருக்கு
கி.சார்லஸ்
ckicharles@yahoo.com
அருமை
//அப் பொய் உண்மையாகவும்
உண்மை பொய்காவும்..
இப்படியாக இருப்பது தான் அழகோ அல்லது இயல்போ நண்பா.....
ஜோதி, சங்கவி, அசோக், பிரவின்ஸ்கா, மாதவராஜ், பாரா, கார்த்திகை பாண்டியன், வேல்கண்ணன், கி சார்லஸ்
அனைவருக்கும் என் நன்றி
பா ரா, மாதவராஜ் அவர்களுக்கு,
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி. கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன்.
இதுவரை யாரும் தொடாத விடயங்களையே உங்களின் எல்லா கவிதைகளும் பேசுகிறது... அதுவே உங்கள் கவிதைகளின் பலமும் கூட..உங்களின் எழுத்து பயணம் தொடர என் வாழ்த்துக்கள்...
நியமான வரிகள்
வாழ்த்துக்கள்
மொட்டை மாடி, நண்பர்கள், நிலா, காதலைக் குறித்த சம்பாசனைகள் - இப்படி எல்லாமே அழகு! ரசித்தேன் மண்குதிரை...
ஒவ்வொரு நண்பனுக்கா திருமணம் ஆகி, சந்திக்க கூப்பிட்டால் காதல் மனைவியரை காரணம் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் ... உங்கள் கவிதை படிக்கையில், கடந்துபோன ஞாபகங்கள்... :-)
Post a Comment