ஒரு குழந்தை
பீறிட்டழுகிறது
ஆழமான காயம்
ஆறாத வலி
அக் குழந்தை
பீறிட்டழுகிறது
உணவோ
மருந்தோ
ஒரு குவளை நீராவது
கொடுக்க வேண்டும்தான்
கூட்டம் நடக்கிறது
ஆலோசனை நடத்துகிறார்கள்
அறிக்கை தயாரிக்கிறார்கள்
அக் குழந்தை
பீறிட்டழுகிறது
உணவு, மருந்து,
ஒரு குவளை நீரும் வேண்டாம்
ஓர் வெளி போதும்
நம் சட்டமன்றம் தீர்மானம்
நிறைவேற்றுகிறது
நாடாளுமன்றம்
கூடிக் களைகிறது
நாம் ஒரு கவிதை செய்கிறோம்
நம்முடைய தலைவர்கள்
கண்டனம் தெரிவிக்கிறார்கள்
அக் குழந்தை
வெடிகுண்டு குழிகளுக்குள்
பதுங்குகிறது
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
கவிதை குழந்தையைப்போல் அழகு...
நண்பா இன்னொரு வரியும் சேர்த்துயிருக்கலாம்.. நன்மை கருதி விட்டுவிட்டீர்கள் என்றும் புரிகிறது.
நல்லதொர் (பாதிப்பான)பதிவு.
மூன்றாம் பத்தியிலே --- ஏதோன்னு விளங்கிடிச்சி
[[நாம் ஒரு கவிதை செய்கிறோம்]]
வேறு ஒன்றும் செய்ய இயலாத/தெரியாத நிலையில் நாம்
ஹும்ம்ம் என்ன செய்ய??
கடைசி மூன்று வரியின் நிஜத்தில் கனக்கிறது
நெஞ்சம்.
புரிகிறது நண்பா , வேறெதுவும் செய்யக் கூடாதபடி சில இடங்களில் கட்டுகளும் இருக்கத்தானே செய்கின்றன .. என்ன செய்ய ?
சொல்ல வந்த வலியை மிக எளிமையாகவும் ஆழமாகவும் பதிந்திருக்கிறீர்கள் ..
வாழ்த்துக்கள்
நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்.....
சங்கவி, அசோக், லாவண்யா, வேல்கண்ணன், ஜமால், ஜெனோ, அண்ணாமலையன்
தங்களின் ஊக்கம் சோர்வுற்றிருக்கும் எனக்கு மிகுந்த உற்சாகமளிக்கிறது
மிக்க நன்றி
கொந்தளிப்பும், கோபமும் மிக்க கவிதை. சமூகத்தின் மீது கடும் விமர்சனத்தை வைக்கிறது.
பிடித்திருக்கிறது.
பாதிக்கிறது நண்பரே...
மாதவராஜ் மற்றும் மணிஜி இருவருக்கும் என் நன்றி
sad :(
Post a Comment