Thursday, September 3, 2009

என் புதிய அறையின் சித்திரம்

வேற்றுமையாக இருந்த‌
இந்த‌ப் புதிய அறையில்
ஒரு சித்திரம் இருக்கிறது

அந்த சித்திரத்தில்
ஒரு பெரிய மரம் இருக்கிறது

நான் தேநீர் தயாரிக்கும் பொழுதில்
புதிய சங்கீதத்தை மீட்டியபடி
நூற்றுக்கணக்கான பறவைகள்
வந்தமர்கின்றன‌

அந்தச் சித்திரத்தில்
ஒரு ஓய்விருக்கை இருக்கிறது
அதிலொரு ஆணும், பெண்னும்
வேறொரு புதிய முத்தத்தை
எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்

இரு பக்கமும் பூச்செடிகள் நிறைந்த‌
ஒரு பசுமையான சாலை இருக்கிறது
அதில் முதியவர்களும், இளைஞர்களும்
நடை பயணம் மேற்கொள்கிறார்கள்

ஒரு சிறிய மைதானமிருக்கிறது
சிறுவர்கள் கால் பந்து விளையாடுகிறார்கள்
சிறுமிகள் ஸ்கேட்டிங் பழகுகிறார்கள்
இரு பெண்கள் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்

திடீரென மழை வருகிறது
ஒரு குழந்தை வெயில் தவழ்ந்து செல்கிறது

இப்போதெல்லாம்
தொலைகாட்சி பெட்டியை இயக்குவதே இல்லை
இந்தச் சித்திரம்
செய்திகளைத் தருகிறது

புத்தகங்களை வாசிப்பதே இல்லை
இந்தச் சித்திரம்
அனுபவங்களைத் தருகிறது

நாளெல்லாம் வினை செய்து
களைப்புற்ற உடம்பை
தூங்கக் கிடத்திவிட்டு
இரவில் நிறம் மாறும்
இந்தச் சித்திரத்தை
பார்த்தபடியே அமர்ந்திருக்கிறேன்.

19 comments:

கார்க்கி said...

அதிக பூச்சுகள் இல்லாமல், எளிமையான வார்த்தைகளால் உங்கள் கவிதை இன்னும் அழகு கூடுகிறது. நல்லா இருக்குங்க

தமிழ்ப்பறவை said...

ரொம்ப அருமையா இருக்குங்க மண்குதிரை....

Vidhoosh/விதூஷ் said...

என் கதைகளில் "பத்மா" போல தேநீர் உங்களுக்கு. கவிதை அருமை.

--வித்யா

சேரல் said...

ஓடை போலும் பெரிய சலனமேதுமற்று செல்கிறது கவிதை, கூடவே என்னையும் சுமந்தபடி...

-ப்ரியமுடன்
சேரல்

ஸ்ரீமதி said...

மிக அருமை... :))

Achilles/அக்கிலீஸ் said...

அருமையான கவிதை மண்குதிரை..

D.R.Ashok said...

நாலுவாட்டி வாசித்தபின் ஒரு மாதிரி கும்ஸா புரியறா மாதிரி இருக்கு.

உடம்பை
தூங்கக் கிடத்திவிட்டு
சித்திரத்தை (மனதால்?)
பார்த்தபடியே அமர்ந்திருக்கிறேன்

ஆனால் பாப்லோவின் ஓவியம் கொண்டத்தையே போதிக்கிறது எனக்கு :)

யாத்ரா said...

உங்கள் அறை சித்திரத்தில் நிகழும் காட்சிகள் அருமை. ரொம்ப நல்ல கவிதை நண்பா.

Nundhaa said...

சித்திரம் அருமை ஆனால் ஏதாவது ஒன்று தான் இருந்திருக்க வேண்டும் கவிதை அல்லது ஒளிப்படம்

TKB காந்தி said...

அழகா இருக்கு நண்பா :)

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

தியாவின் பேனா said...

அருமை , அட்டகாசம் , தரமோதரம் , இதற்குமேல் என்னத்த சொல்ல....................

மாதவராஜ் said...

சமீபத்தில் நான் வாசித்த அற்புதமான கவிதை. வரிகள் சித்திரங்களாகி விட்டன. பாராட்டுக்கள் கவிஞரே...!

நளன் said...

:-)))

நட்புடன் ஜமால் said...

அந்த சித்திரம் அழகு.


[[இப்போதெல்லாம்
தொலைகாட்சி பெட்டியை இயக்குவதே இல்லை
இந்தச் சித்திரம்
செய்திகளைத் தருகிறது]]

அருமை.

சந்தான சங்கர் said...

அழைப்பிதல்

நிகழ்ச்சி : மூன்றாம்பிறை
நாள் : உங்கள் நாள்
நேரம்: உங்களின் நேரம்

வரவேற்பு : கவிதைகள்

அன்புடன்,
சந்தான சங்கர்.

(மொய் எழுதவேண்டாம்
மெய் எழுதிவிட்டு செல்லுங்கள்.)

பா.ராஜாராம் said...

//திடீரென மழை வருகிறது
ஒரு குழந்தை வெயில் தவழ்ந்து செல்கிறது//
மண்குதிரை,
கட்டிகிரட்டா?..(கவிதை மொத்தத்திற்க்குமாகவும்...)

சென்ஷி said...

அருமை நண்பரே!

மண்குதிரை said...

karuththukkalai pakirnthu konda nanbarkal anaivarukkum en nanriyum, anpum