Friday, July 17, 2009

நதியில் நனைதல்












புகைப்படம் நன்றி : கிராபியன் பிளாக்



SVMR ஜவளிக் கடல் இருக்கும்
அந்த இடத்தில்தான்
ராஜலட்சுமி வளையல் கடை இருந்தது
அதற்கு முன்னால்
சுப்பையா டெய்லர் பட்டன் கடை இருந்தது
அதற்கு முன்னால்
கனி சவுண்ட்சர்வீஸ் இருந்தது
அதற்கு முன்னால்
ஒரு ரேடியோ பழுது நீக்கும் கடை இருந்தது
அதற்கு முன்னால்
முருகமாமா பெட்டிக்கடை வைத்திருந்தார்
அதற்கு முன்னால்
ஒரு பெரிய புளிய மரம் இருந்தது
அந்த இடத்தில்தான்
புற்று நோய் முற்றி
ஐகிரவுண்டில் இறந்து போன
அரசண்ணன் பட்டரை வைத்திருந்தார்

இதோ
நான் நிற்கும் இந்த இடத்தில் நின்று கொண்டுதான்
தன் பம்பரத்துக்கு ஆணி போட்டுத் தரச் சொல்லி
ஒரு சின்னப் பையன் கெஞ்சிக் கொண்டிருப்பான்.

20 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

Nostalgia!

நல்லா இருக்குங்க.

D.R.Ashok said...

Nice ma

வெங்கிராஜா said...

நினைவுகள் ;D


படம நல்லா இருக்கு.. லிங்க் குடுத்தா இன்னும் நல்லாயிருக்கும்!

thiratti.com said...

அருமையா இருக்குங்க..

அந்த இடம் எப்படி உருமாறினாலும், மாறது, சில நினைவுகள்..

சேரல் said...

அருமை!

-ப்ரியமுடன்
சேரல்

யாத்ரா said...

அழகான கவிதை நண்பா, மிகவும் பிடித்திருக்கிறது.

" உழவன் " " Uzhavan " said...

என்னது SVMR ஜவுளிக்கடலா??? பாஸ்.. உங்களுக்கு விளாத்திகுளமா? :-)

Nundhaa said...

Sometimes it's not just longing for the past ... it's belonging to the past ... lovely ... I like it ...

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க மண்குதிரை
நண்பர் பா.ராஜாராமின் -உதியமரம் போல இதுவும் நெடு நாளைக்கு நெஞ்சை விட்டு நீங்காது..1

நட்புடன் ஜமால் said...

நதியில் நனைதல்

நினைவுகள் எனும் நதியில் ...

ச.முத்துவேல் said...

நண்பா, உங்கள் கவிதைகளில் எனக்கு மிகப்பிடித்தது என்று இதை சொல்லலாம்.இப்போதுதான் புயலிலே ஒரு தோணி படித்து முடித்தேன். அதில், பழைய மதுரையை ப.சிங்காரம் காட்சிப்படுத்தியிருப்பார். நான்கூட , என் பால்யகாலத்தில் பார்த்த என் ஊரை மனதில் நினைத்துப்பார்த்துக்கொண்டு, அதை மாறிப்போன இன்றைய ஊருடன் தொடர்புப்படுத்தி , எப்படி யாருடன் நினைவுகூர்வது, அந்த அழிந்துபோன ஓவியத்தை மீட்பது என்று நினைத்துக்கொள்வதுண்டு.

இதை எப்படியாவது கதையாகவோ, கவிதையாகவோ என்னால் எழுதிவிடமுடிந்தால் நான் பாக்கியவானாக இருந்திருப்பேன். எவ்வளவு எளிதாக ஒரு கவிதையில் எழுதிவிட்டீர்கள்! வாழ்த்துகள் நண்பா.

ச.முத்துவேல் said...

ஆர்வத்தில் விட்டுவிட்டேன்.இது வெறும் நினைவுகூர்தல் மட்டுமல்ல. நிறைய விசயங்களை கவிதையில் சொல்லியிருக்கிறீர்கள்.

பிரவின்ஸ்கா said...

நல்லாருக்கு

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

ஆ.முத்துராமலிங்கம் said...

நல்ல கவிதை.
அதை விட அதன் படிம கூறுகள் ஒரு காட்சியாக பின்னோக்கி இழுத்துச் செல்லவது சிறப்பு.

sakthi said...

arumai

நளன் said...

:) nice poem.

பிரியமுடன்.........வசந்த் said...

ஆட்டோ கிராஃப்....

சூப்பர்ப்.....

மண்குதிரை said...

சுந்தர், அசோக், வெங்கி, வெங்கடெஷ், சேரல், யாத்ரா, உழவன், நந்தா, முத்துவேல், நேசமித்ரன், ஜமால், ப்ரவின்ஸ்கா, முத்துராமலிங்கம், சக்தி, நளன், வசந்த் ,
நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

உழவன், உங்களுக்கு விளதையா?

பா.ராஜாராம் said...

நல்ல கவிதை வாசிக்க நேர்கிற போதெல்லாம் கண்கள் நிறைகிறது...கழுத்தோடு இறுக்கிக்கொண்டு கிறங்கி கிடைக்கணும் போல் இருக்கு மண்குதிரை!வாழ்த்தும்,அன்பும்!

இரசிகை said...

ninaivukalukku narai illai...

arumai:)