Wednesday, July 15, 2009

வெள்ளிக் கிழமை
















இந்த வெள்ளிக் கிழமையில்தான்
இருக்கண்குடி மாரியம்மனுக்கு
முடியிறக்குவதாக
வேண்டிக் கொண்டார்கள்

பெண்பார்த்து விட்டுச் சென்றவர்கள்
இந்த வெள்ளிக் கிழமையில்தான்
செய்தி சொல்வதாக சொல்லியிருக்கிறார்கள்

இந்த வெள்ளிக் கிழமையில்தான்
அன்பு நண்பன்
நேர்காணலுக்கு
அழைக்கப்பட்டிருக்கிறான்

இந்த வெள்ளிக் கிழமையில்தான்
சந்தித்துக் கொள்வதாக
ஒரு காதல் ஜோடி
தொலைபேசியில் முடிவு செய்துகொள்கிறார்கள்

இந்த வெள்ளிக் கிழமையில்தான்
என் அன்பான காதலி
கல்லூரியில் சேர்கிறாள்

அதே வெள்ளிக் கிழமையில்தான்
கதறும் குழந்தையின் அழுகையை
பொருட்படுத்தாது
மூர்க்கமாய் விரையும்
ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில்
நானும் பிரிகிறேன்

14 comments:

நட்புடன் ஜமால் said...

காதலி கல்லூரிக்கு செல்கிறார்

அவரை பிரிந்து வரும் உங்கள் வேதனையா இந்த வரிகள் ...

ரங்கன் said...

வெள்ளிக்கிழமை வெள்ளிகிழமைதான்..
அது பாட்டுக்கு அது வாராவாரம் வந்துட்டு போவுது..

நீங்க ஏன் அதை சீண்டுறீங்க????

அனுஜன்யா said...

ஹ்ம்ம், காதலியைப் பிரிந்தாலும், திரும்ப இங்கு வந்து சேர்ந்ததற்கு ....'நல்வரவு'.

நல்ல கவிதை.

அனுஜன்யா

sakthi said...

அதே வெள்ளிக் கிழமையில்தான்
கதறும் குழந்தையின் அழுகையை
பொருட்படுத்தாது
மூர்க்கமாய் விரையும்
ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில்
நானும் பிரிகிறேன்

அருமை

கார்க்கி said...

வாங்க.. அடிக்கடி காணாம போயிடறீங்க

"அகநாழிகை" said...

மண்குதிரை,
நலம்தானே?
கவிதை நன்றாய் இருக்கிறது.
ஊருக்கு கிளம்பியபின் ஏற்படும்
தவிர்க்கயியலாத சோகத்தை அழகாக
கூறியிருக்கிறீர்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ச.முத்துவேல் said...

ரொம்ப நல்லாயிருக்கு.ஒரே நொடிகூட ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமாய்.உங்களின் இந்த வெள்ளிக்கிழமை பகிர்வு,ஒவ்வொன்றும்,ரசிக்கத்
தக்கவையாய்,இயல்பாய் பொருத்தமாயிருக்கிறது.

எளிமை, அழகு.

கல்யாண்ஜியின் ஒரு கவிதையை நினைவுபடுத்துகிறது.
விதம்விதமான கைகளின் செயல்பாடுகளை அடுக்கிக்கொண்டே வந்து, தன்னுடைய கைகள் ஒரு குழந்தையின் தலையைக் கோதுவதை எழுதியிருப்பார்.

அதே அளவுக்கு உங்கள் கவிதையும் சிறப்பு.
(பக்கத்துல இருக்கும்போது,காணாமப் போயிடுறிங்க. தொலைவிலிருக்கும்போதுதான், இணையத்தின் வழி தென்படுகிறீர்கள்)

யாத்ரா said...

நல்லா இருக்கு நண்பா.

D.R.Ashok said...

:)

நேசமித்ரன் said...

பிரிவின் சொற்கள் மிக நுட்பமாக சொல்லப்பட்டிருக்கும் இக்கவிதை
அன்பின் முத்துவேல் சொன்னாற்போல் எனக்கும் கல்யாண்ஜியின் கைகள் கவிதையை நினைவூட்டியது

நட்புடன் ஜமால் said...

இங்கே பாருங்கள் - பெற்று கொள்ளுங்கள்

வாழ்த்துகள்

பிரவின்ஸ்கா said...

கவிதை அருமை

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

மண்குதிரை said...

ஜமால், மிக்க நன்றி நண்பரே

ரங்கன், நன்றி

அனுஜன்யா, வாங்க தலைவரே நன்றி

சக்தி, மிக்க நன்றி தோழி

கார்க்கி, வாங்க நண்பா இனி தொடர்ந்து எழுதுவேன்ன்னு நெனைக்கேன்

வாசுதேவன், உங்களையும் நண்பர்களையும் சந்திக்கனும்னு நெனைச்சிருந்தேன் முடியாதது வருத்தம். நன்றி

முத்துவேல், வாங்க நண்பா , நலம் தானா?

யாத்ரா, நண்பா வங்க

அசோக், நன்றி

நேசமித்ரன், நன்றி நண்பரே

பிரவின்ஸ்கா, நன்றி நண்பரே

இரசிகை said...

jamal sollith thaan vanthen:)

vazhththukkal:)