
*உங்களுடைய சித்தங்கள்
எனக்குப் புரியவில்லை
என்னுடைய கவிதைகள்
உங்களுக்குப் பிடிக்கவில்லை
*உங்களுடைய சொற்கள்
காற்றில் நீந்திக்கொண்டிருக்கின்றன
என்னுடைய சொற்கள்
சருகாக மிதக்கின்றன
*என்னழகை உணரமுடியாதவள்
என்னுடலை வெறுக்கிறாள்
*நான்
நிராகரிக்கப்படுகிறேன்
தோற்கடிக்கப்படுகிறேன்
ஏமாற்றப்படுகிறேன்
எல்லாயிடங்களிலுமிருந்து
புறகணிக்கப்படுகிறேன்
*என் அறையின் எல்லா கதவுகளையும்
மூடிவிடுகிறேன்
இதோ
நான் நட்டுவைத்த ரோஜா
தளிர்விட்டிருக்கிறது
அதையும்
என் புது நாய்க்குட்டியிடம் மட்டுமே
பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.
22 comments:
உங்களுடைய சித்தங்கள்
எனக்குப் புரியவில்லை
என்னுடைய கவிதைகள்
உங்களுக்குப் பிடிக்கவில்லை
யார் சொன்னது பிடிக்கலைன்னு
*உங்களுடைய சொற்கள்
காற்றில் நீந்திக்கொண்டிருக்கின்றன
என்னுடைய சொற்கள்
சருகாக மிதக்கின்றன
வருத்தம் வேண்டாம் நம் வார்த்தைகளுக்கும் மதிப்பு வரும்
*நான்
நிராகரிக்கப்படுகிறேன்
தோற்கடிக்கப்படுகிறேன்
ஏமாற்றப்படுகிறேன்
எல்லாயிடங்களிலுமிருந்து
புறகணிக்கப்படுகிறேன்
சுய பச்சாதாபம் ஒரு சில நேரங்களில் எழும் எல்லாருக்கும் அதை கடந்து வருவதே வாழ்கை
இதோ
நான் நட்டுவைத்த ரோஜா
தளிர்விட்டிருக்கிறது
அதையும்
என் புது நாய்க்குட்டியிடம் மட்டுமே
பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.
வித்தியாசமான கவிதை
வலிகளுடன்
வித்தியாசமா இருக்குங்க மண்குதிரை. ஏன் இப்படி இருக்கீங்க... எல்லாவற்றிற்கும் ஏற்றமாதிரியான விளிம்பில் நடந்து செல்லவேண்டியதுதானே!!!
அருமையா இருக்குங்க.
யார் சொன்னது புரியவில்லை என்று
யவர் சொன்னார் பிடிக்கவில்லை என்று....சொல்பவர்கள்க்காகவா பிறந்தோம்.....காற்றில் மிதக்கும் சொற்கள் கையில் பிடிபடுவதில்லை... ரசனையற்ற ஒருத்தியை வைத்தா? இன்றைய நிராகரிப்பு நாளைய நிறைவு, இன்றைய தோல்வி நாளைய வெற்றி இன்றைய ஏமாற்றம் நாளைய ஏற்றம்,இன்றைய புறக்கணிப்பு நாளைய ஏற்பு நற்கணிப்பு..... இன்றோடா முடிந்துவிடுகிறது எல்லாம் தளிர் விட்ட செடி கூட துளிர் விட நாட்பட வேண்டும் நீ துயர் விடு நாய்க்குட்டி மட்டுமல்ல நாங்கள் கூட உங்களைப்பிடித்தவர்கள் தான்......
வித்தியாசம் காட்டியிருக்கீங்க.
நல்லா இருக்கு. முடிவில் அந்த வார்த்தைகள் மனதில் பதிகின்றது.
:((
anbudan aruNaa
கவிதை மிகவும் அருமையாக இருக்கிறது.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
அருமை.. அருமை! மனிதர்களிடையே துண்டிக்கப்படும் சம்பாஷணைகளின் வலியையும், கருத்து வேறுபாடால் நிகழும் மோதல்களையும் வேறு வழியின்றி அனுசரித்துக்கொண்டு யார் மேலோ இருக்கிற கோபத்தை டேபிளில் குத்திவிட்டும், குடித்துவிட்டும் மறக்க நினைக்கிற சாமான்யர்களின் உணர்வுகளை படம் பிடித்திருக்கிறீர்கள்.
(பிறகு, கடைசி பத்தியில சின்ன எழுத்துப்பிழை இருக்குங்க.. மாத்திப்புடுங்க)
பிரம்மாதம் - “என் தீவு வாழ்க்கை”-யின் தொடர்ச்சி அருமை ...
அழகான, வித்தியாசமான கவிதை மண்குதிரை
//உங்களுடைய சொற்கள்
காற்றில் நீந்திக்கொண்டிருக்கின்றன
என்னுடைய சொற்கள்
சருகாக மிதக்கின்றன//
அர்த்தமுள்ள சொற்கள்...
ஏதோ ஒரு முற்றுப் பெறாமை...கவிதையென்றாலே முற்றுப் பெறாமையோ...ஓ.கே....
அருமை!
-ப்ரியமுடன்
சேரல்
சக்தி, உங்கள் அன்புக்கு நன்றி.
ஆதவா, அதுவும் சரிதான் நண்பா.
தமிழரசி, மிக்க நன்றி.
முத்துராமலிங்கம், நன்றி நண்பரே.
அருணா, நன்றீ.
பிரவின்ஸ்கா, நன்றி நண்பரே.
வெங்கி, நன்றி.
நந்தா, ஆமாம் . நன்றி.
காந்தி, நன்றி.
தமிழ்ப்பறவை, மிக்க நன்றி நண்பரே.
சேரல், நன்றி நண்பா.
அருமை!
உங்களின் பெரும்பான்மையான கவிதைகள் மிகவும் வேறுபட்டு, அருமையாகக் காட்சியளிக்கிறது. வாழ்த்துக்கள்!
//என் அறையின் எல்லா கதவுகளையும்
மூடிவிடுகிறேன்
இதோ
நான் நட்டுவைத்த ரோஜா
தளிர்விட்டிருக்கிறது//
வீட்டிற்குள்ளேயே ரோஜா செடியை வைத்துள்ளீர்கள்? சூரிய ஒளி படும்படி வெளியில் வைக்கவில்லை?
நண்பா, கவிதை அருமை
//நான் ஊற்றும் நீரை விட
நான்தான் முக்கியமதற்கு//
ஆத்மாநாமின் ரோஜாப்பதியன்கள் நினைவு வந்தது, உங்கள் ரோஜா தளிர் விட்டவுடன்
நிராகரிப்பின் வலியைச் சொல்லும் மீண்டும் ஒரு கவிதை. நல்லா வந்திருக்கு.
நிஜம் என்றால், லூஸ்ல விடுங்க பாஸ்.
அனுஜன்யா
\\இதோ
நான் நட்டுவைத்த ரோஜா
தளிர்விட்டிருக்கிறது
அதையும்
என் புது நாய்க்குட்டியிடம் மட்டுமே
பகிர்ந்துகொள்ளப்போகிறேன். \\
மிகவும் இரசித்தேன் ...
செல்வேந்திரன், யாத்ரா, உழவன், அனுஜன்யா, ஜமால்
அனைவருக்கும் என் நன்றிகள்
//என் அறையின் எல்லா கதவுகளையும்
மூடிவிடுகிறேன்
இதோ
நான் நட்டுவைத்த ரோஜா
தளிர்விட்டிருக்கிறது//
நிராகரிப்பின் ரணத்தை சொல்லிட்டு உங்களால் தளிர்விட்டதை நீங்களே நிராகரிச்சி இருக்கீங்களே. அதே நாய்குட்டியோட நீங்க அந்த ரோஜா செடியையும் சேர்த்து இருக்கலாமே?
ஒரு வேளை ரோஜா செடின்னு நீங்க சொல்றதே உங்களை நிராகரித்தவங்களை தானோ?
Post a Comment