Tuesday, April 7, 2009

மழையும், வெயிலும்..




என் செல்ல மகள்
நடை பயில்வதைப் போல்
தத்தி தத்தி வருகின்றது
மழைக்காலத்தின் முதல் மழை

கையில் எடுத்து கொஞ்சிக்கொண்டிருக்கிறேன்

சின்னதாக முகம் மாற்றும்
என் மூத்த மகள் போல்
வந்து தொற்றிக்கொள்கிறது
இந்த வெயிலும்.

15 comments:

ச.முத்துவேல் said...

பிள்ளைகளைப் பிரிந்து இருக்கும் சூழலிலுள்ள ஒரு தந்தையின் கவிதையாகப் பார்க்கும்போது, இன்னும் அழுத்தம் கூடுகிறது. நல்லாயிருக்கு.

வெங்கிராஜா said...

"இங்க வந்து சப்பாத்திக்கு
மாவு பிசைங்க..."
என்ற கொஞ்சலில்
மகளின் இதழில் வானவில்.

sivaraajan said...

மகள்களும்,மழைகளும்...
அருமையான உவமை
கவிஞரே!

ஆ.முத்துராமலிங்கம் said...

கவிதை நன்றாகவே இருக்கு
உவமை அழகு.

மண்குதிரை said...

ச.முத்துவேல்,

வருக, நன்றி. முத்துவேல் உயிரோசையில் கவிதை அருமை

வெங்கிராஜா,
நன்றி நண்பரே

sivaraajan,
உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் என் நன்றி

ஆ.முத்துராமலிங்கம்,

உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் என் நன்றி

அனுஜன்யா said...

நல்லா இருக்கு. உங்களை எப்படி கூப்பிடுவது. மண்குதிரை என்றால் நெருக்கமாக இல்லை.

அனுஜன்யா

மண்குதிரை said...

நன்றி அனுஜன்யா

நீங்கள் வேண்டுமானால் மலைச்சாமி என்று கூப்பிடுங்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

மழையும், வெயிலும், மகள்களும்

நல்லா ரசிக்கும்படியா அமைந்த கவிதை.

மண்குதிரை said...

@அமிர்தவர்ஷினி அம்மா

தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி !

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

மிக அழகான கவிதை... மழையையும் வெயிலையும் திண்ணையில் உட்கார்ந்து ரசித்த காலங்களை நினைவுபடுத்துகிறது.. அதனை எழுத ஒரு மனது வேண்டும்,..

அன்புடன் அருணா said...

போட்டிக்கு வரும் குட்டிப் பையனைப் போல வானவில்லும் வந்திருக்குமே???அழகாக உணர்ந்திருக்கிறீர்கள்..
அன்புடன் அருணா

மண்குதிரை said...

@முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி

நெருக்கத்தை உணர்ந்ததிற்கும் நன்றிகள்


@அன்புடன் அருணா

//போட்டிக்கு வரும் குட்டிப் பையனைப் போல வானவில்லும் வந்திருக்குமே???//

ரசித்தேன்.


தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி

sugirtha said...

அந்த மூத்த மகளின் சின்ன possessiveness ஐ / செல்ல கோபத்தை வெயிலாய் சித்தரித்தது மற்றும் செல்ல மகள் நடை போன்ற மழை இரண்டுமே இனிய உவமை. :)

மண்குதிரை said...

நன்றி சுகிர்தா.

நளன் said...

:-)))