
உங்கள் செல்ல மகள் நடை பயில்வதை உங்கள் மனைவி புளகங்கிதத்துடன் காண்பிக்கிறாள். நீங்கள் ரசித்துக்கொண்டே பள்ளி செல்லும் உங்கள் மூத்த மகளைக் கூட்டிக் கொண்டு வெளியே வருகிறேர்கள். ஆர்மிக்காரர்கள் உங்கள் சிறிய கிரமாத்திற்குள் நுழைகிறார்கள். தீவிரவாதத்தை ஒடுக்க ஆதரவளித்து கிராமத்தை காலி செய்யுமாறு ஒலிப்பெருக்கியில் கனிவுடனும் நேரில் கண்டிப்புடனும் கேட்டுக்கொள்கிறார்கள்.
நீங்கள் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வெளியெறுவதற்குள் வான் படை தாக்குதலை ஆரம்பிக்கிறது.
என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆனால் அம் மக்களின் வாழ்க்கை அது தான்.
இதே போன்ற காட்சி நேற்று நான் பார்த்த மணிரத்தினத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் வருகிறது. முழு ஈழப்போரையுமே ஆயுத வியாபாரமாக சித்தரிப்பது - போராளிகளை மக்கள் விரோதிகளாக பதிவு செய்வது போன்ற விடயங்களில் இத் திரைப்படத்துடன் மாறுபட்ட கருத்து இருந்தாலும் முக்கியமான பதிவு என்பதை மறுப்பதற்கில்லை.
மக்கள் எறும்புகளைப் போல் ஊர்ந்து செல்கிறார்கள்...
ஒர் உடைந்த குரலில், வைரமுத்துவின் வரிகளை எம் எஸ் வி பாடுகிறார்............
விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பன மரக் காடே
பறவைகள் கூடே
மறு முறை
ஒரு முறை
பார்ப்போமா?
என்னால் தொடர்ந்து கேட்க முடியவில்லை.
''ஊருக்கு திரும்ப வந்திருக்கிறேன். என் வீடு குண்டுகளால் சிதைக்கப்பட்டுவிட்டது. நாங்கள் விளையாடிய வீதியில் ஆமிக்காரர்கள்'' இதே போன்ற சேரனின் கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.
இப் படத்தின் இறுதிக்காட்சியில்,
ஈழத்தாய் பாத்திரம் ஏற்றிருக்கும் நந்திததாஸ், தன்னுடன் வருமாறு அழைக்கும் தன் மகளிடம் சொல்கிறாள், ''என்றைக்காவது விடியும் அன்றைக்கு வா''
''அது எப்போ? அது எப்போ?'' என்ற அந்த குழந்தையின் கேள்வி ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
2 comments:
'கன்னத்தில் முத்தமிட்டால்' சில வலிகளைக் காட்சிப்படுத்தியிருப்பது மறுப்பதற்கில்லை. நீங்கள் 'ஆணிவேர்' பார்க்கவேண்டும்.
நல்ல பதிவு நண்பரே !
நண்பர் ரிஷான்,
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
சில வலிகளைத்தான் காட்சி படுத்தியிருக்கிறார் என்பதை நானும் ஏற்கிறேன்.
நீங்கள் குறிப்பிடும் ஆணிவேர் திரைப்படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. தங்கள் பரிந்துரைக்கு நன்றி.
அப்படத்தின் முன்னோட்டத்தை Youtube-ல் பார்த்தேன். விடுமுறைக்கு இந்தியா செல்லும் போது வாங்கிப் பார்க்கிறேன் அந்த படம் எங்கு கிடைக்கிறது? கொஞ்சம் சொல்லுங்கள்.
அஞ்சலில் என்றால் முகவரி தாருங்கள்.
அன்புடன்,
மண்குதிரை.
Post a Comment